ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று மத்திய குழுக்கூட்டம் அதன் தலைவரும், அமைப்பாளருமான அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தலைமையில் கட்சியின் மாவட்டக்காரியாலயத்தில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு மத்திய குழுவின் உபதலைவர் ஏ.எல்.மர்ஜூன் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது மத்திய குழு மாதாமாதம் கூடுகின்றது. இங்கு ஆக்கபூர்வமான கருத்தாடல்களை மேற்கொள்வதுடன், பல நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றது.
தேர்தல் காலங்களில் பல சவால்களுக்கு முகங்கொடுத்து கட்சியின் வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அளப்பரிய பங்களிப்புக்களையும் வழங்கி வந்திருக்கின்றது.
துரதிரஸ்டவசமாக நமது கட்சியின் பெயரில் களமிறங்கி தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் மத்திய குழுவை ஊக்கப்படுத்துவதாகவோ, கௌரவிப்பதாகவோ நடந்து கொள்வதாக தெரியவில்லை.
தொழில் வாய்ப்புக்களில் கணிசமான பங்கீடுகள் கிடைக்காமலும், அபிவிருத்தியிலும் முற்றாக புறக்கணிக்கின்ற நிலையே காணப்படுகின்றது. கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அண்மையில் தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றபோதும், அதில் ஒன்றைக்கூட மத்திய குழுவிற்கு வழங்கவோ அல்லது அது தொடர்பில் அறிவிக்கவோ இல்லை.
கட்சிக்கு வருகின்றபோது ஊமையாக வருவார்கள் வந்து அதிகாரத்தைப் பெற்றதும் ரசாக்களாக மாறிவிடுகின்றனர். மத்திய குழுவைப் பகைத்து எதைச் செய்தாலும் கடைசியில் அவர்களுக்கு தோல்வியிலேயே முடியம்.
ஸ்ரீலங்கா மஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்த பல இளைஞர்கள் உள்ளனர். அவர்களை முதலில் கவனிக்க வேண்டும். இன்று சிலர் தமக்குக் கிடைத்த தொழில்களை பல இலட்சங்களுக்கு விற்றுள்ளதாக உயர்பீட உறுப்பினர் ஒருவர் உயர்பீடக்கூட்டத்தில் முறையிட்டார். இதுவெல்லாம் நல்லதல்ல.
பதவிகள் அமானிதமானது அது நாளை ஒருநாள் இல்லாமல் போகலாம். இருக்கும்போது எதனைச் செய்தாய் என்பதுதான் கடைசியில் வரும். இனியாவது அதிகார தரப்பினர் கட்சியின் மத்திய குழுக்களை மதித்து அதனுடைய தீர்மானத்தின்படி செய்றபடுவதற்கு முன்வரவேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இந்தக்கூட்டத்தில் கூடுதலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :
Post a Comment