ஞானசாரரின் ஞானசூண்யம் -3.

முனாப் நுபார்தீன்-

பொது பள சேனாவின் சர்வதேச மாநாடு கடந்த 28-09-2014 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு சுகதாச அரங்கில் நடைபெற்றது குறித்த மாநாட்டைப் பற்றிப் பலரும் பலதரப்பட்டக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். என்றாலும் மேற்ப்படி மாநாட்டைப் பொறுத்த வரை அங்கு ஆற்றப்பட்ட உரைகளைப் பார்க்கின்ற போது அந்த மாநாடு முக்கியமான இரண்டு கருப்பொருற்களைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

1. முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டி விடுதல்.
2. அதன் ஊடாக தனி பௌத்த பேரினவாதத்தை ஆட்சியேற்றல்.


மேற்படி மாநாட்டில் உரையாற்றிய ஞானசாரர் உட்ப்பட அனைத்துப் பேச்சாளர்களும் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் முன்வைத்தக் கருத்துக்கள் அவர்களின் அறியாமையின் அதி உச்சகட்டத்தினை தெளிவு படுத்துவதாகவுள்ளது. மாநாட்டின் ஆற்றப்பட்ட உரைகள் நூறு வீதம் முஸலிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியுமே அமைந்திருந்தது. இவர்களின் இந்த உரைகளைக் கேட்டு அதனை யாராவது ஏற்பார்களாக இருந்தால் அது அவர்களின் அதி கூடிய முட்டாள்தனமாகும்.
பேச்சாளர்களின் முட்டாள்தனங்களைச் சற்று பாருங்கள்.

1. அகில இலங்கை உலமா சபை ஒரு தீவிரவாத அமைப்பு என்பதே அனைவரது உரையிலும் தொக்கி நின்ற செய்தியாகும். இந்த மடையர்களுக்கு 1924 ம் ஆண்டு அகில இலங்கை உலமா சபை ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை சுமார் 90 ஆண்டு கால வரலாற்றில் அகில இலங்கை உலமா சபையால் மேற்கொள்ளப்பட்ட ஒரேயொரு தீவிரவாத செயலையேனும் காட்ட முடியுமா?

2. இலங்கை என்பது பல்லின மக்கள் வாழும் நாடு கிடையாது இது சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றார்கள். இந்த மடையர்களுக்கு இந்த நாட்டில் ஆரம்ப காலம் முதல் பல்லின மக்கள் வாழ்து கொண்டிருப்பது எவ்வாறு தெரியாமல் போனது.? சுருங்கச் சொல்வதாயின் இந்த நாட்டிற்குள் பௌத்த மதம் ஊடுருவுவதற்கு முன்னிருந்தே யாராலும் எந்த சக்தியாலும் இன்று வரை மத மாற்றத்திற்கு உட்படுத்தப்பட முடியாது ஓரிறைக் கொள்கையில் உறுதியானவர்களாக இருந்து வரும் இந்த நாட்டின் ஆதி குடிகளாகிய இலங்கைச் சோனகர்களுக்கே இந்த நாடு செந்தமாகும் என்பதுவே நியாயமான வாதமாகும்.

3. முஸ்லிம் நாடொன்றுக்குச் சென்று நம்மால் (பல்லின மக்கள் வாழும் நாடு எனும் ) இதனைக் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த மடையர்களுக்கு இலங்கைக்கும்ää இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடு தெரியவில்லையா? தனி முஸ்லிம்களை மாத்திரம் கொண்ட மத்திய கிழக்கு நாடுகள் தவிரவுள்ள பங்களாதேஸ்; போன்ற பிற இனங்களையும் தன்னகத்தே கொண்ட நாடுகளில் அந்த அந்த மதங்களுக்குரிய சுதந்திரங்கள் வழங்கப்பட்டு அவர்களுக்குரிய மதவழிபாட்டுத் தலங்களும் அமைக்கப்படிருப்பது இந்த வடிகட்டிய முட்டாள்களுக்குப் புறியாமல் இருப்பதன் மர்மம்தான் என்ன?

4. உலகிலேயே உள்ள மிகப்பளமை வாய்த 2500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள ஒரே மதம் பௌத்த மதம் என்று கூறப்பட்டது. இந்த மடையர்களுக்கு உலகிலேயே உள்ள மிகப்பளமையானதும் முதன்மையானதுமான மார்க்கம் இஸ்லாம் மாத்திரமே என்பது தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இஸ்லாம் என்பது 1400 வருடங்களுக்கு முன் நபி முகம்மது (ஸல்) அவர்களாள் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம் என்றே அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.இது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடேயாகும். இஸ்லாம் என்பது ஆதி மனிதர் மனிதகுலத் தந்தை ஆதம் (அலை) அவர்களின் வருகையுடன் உருவான மார்க்கமாகும். அதுவே உலகில் தோன்றிய முதல் மார்க்கமாகும்.

5. முஸ்லிம்கள் இந்த நாட்டு பௌத்தர்களை மதம் மாற்றிக் கொண்டிருக்கின்றார்களாம். இந்த மடையர்களுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதி ஒரு பௌத்தராகவும் பிரதமர் பௌத்தராகவும் இருக்கும் அதே நேரம் வெறும் 08 விகிதமாக மிகவும் சிறுபாண்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களால் இந்த அபாரமிகு செயலை எவ்வாறு வெற்றிகரமாக செய்ய முடியும் என்பது புறியவில்லையா?

6. அரபு நாடுகளின் எரிபொருள் எமக்குத் தேவையில்லை நாம் எரிபொருள் பெறுவது சிங்கப்பூரிலிருந்தாகும் என்று கூறி ஞானசாரர் தனது ஞானசூண்யத்தினை மீண்டும் பதிவு செய்தார்; இந்த மடையனுக்கு உலகுக்குத் தேவையான எரிபொள்களில் 90 வீதமானவற்றை வளைகுடா அரபு நாடுகள்தான் ஈடு செய்கின்றது என்பது தெரியாது போலும்.

7. முஸ்லிம் இழைஞர் யுவதிகள் மாற்று மத இழைஞர் யுவதிகளுடன் காதல்வயப்பட்டால் அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றித் திருமணம் செய்கின்றார்களாம். அவர்களோ அவரவர் மதத்தில் இருந்து கொள்ள விட்டு விடுவார்களாம் இது எவ்வளவு பெரிய பொன்னத்தனமும் முட்டாள்தனமுமான கொள்கை என்பதுகூட அவருக்குப் புறியாது போய்யுள்ளது.

8. ஞானசாரரின் அடுத்த ஞானசூண்யம் முஸ்லிம்கள் கள்ளத்தனமாக மார்க்கத்தைக் கற்பிற்கின்றார்களாம் அவர்களோ அனைத்து விடயங்களையும் வெளிப்படையாகவே செய்கின்றார்களாம். இந்த அறிவிலிக்கு முஸ்லிம்களின் அத்தனை கலாபீடங்களும் பகிரங்கமாக நாட்டு சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு உரிய முறையில் சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் அல்லதுதினைக்களங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது கூட தெரியாதா?

ஞானசார அவர்களே உலகிலுள்ள அத்தனை மொழிகளிலும் மொழி பெயர்கப்பட்டு மிகவும் வெளிப்படையாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி போதிக்கப்படுகின்ற பின்பற்றப் படுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மாத்திரம்தான். உமக்கு உலகிலுள்ள எந்த மொழியில் வேண்டுமானும் எமது மார்க்கம் கிடைக்கும். அவ்வாறு எமது இஸ்லாம் மார்க்கம் உமது மொழியிலும் தாராளமாகக் கிடைப்பதனால்தான் நீரும் அதனைத் தப்பும் தவறுமாக விளங்குகின்றீர் இல்லை என்றால் நீர் வாய் திறக்கவே முடியாது.

இன்னும் நீர் உங்கள் மார்க்கம் மிகவும் வெளிப்படையானது என்று கூறினீரே நீர் உமது கூற்றில் உண்மையாளராக இருந்தால் உமது மார்கத்தை உலகிலுள்ள எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிச்சத்திற்க்குக் கொண்டு வந்திருக்கின்றீர் என்று கூற முடியுமா? குறைந்த பட்சம் இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு மாற்று மொழியாகிய தமிழ் மொழியிலாவது?

திருவாளர் ஞானசார அவர்களே பேசும் போது நாவிற்;க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமல் உளறிக் கொட்டாது சற்று சிந்தித்துப் பேசுவீராக நீர் மடயன் என்பதற்காக அனைவரையும் மடயர்கள் என்று எடைபோடுவதென்பது உமது முட்டாள்தனத்தின் அதி உச்சகட்டமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :