சகல அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விஷேட விடுமுறை

எம்.எம்.ஏ.ஸமட்-

கல அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஏதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட் தாஜுடீன் தெரிவித்தார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் கோரிக்கைக்கேற்பவும் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் வேண்டுகோளுக்கிணங்கவும் முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் ஹஜ்ஜுப் பெருநாள் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றவும் பெருநாளை சந்தோஷமாக அனுஷ்டிக்கவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரையின் பேரில் கல்வி அமைச்சின் செயலாளரினால் இந்த விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 885 முஸ்லிம் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள இவ்விஷேட விடுமுறைக்கான பதில் பாடசாலை 11ஆம் திகதி சனிக்கிழமை நடாத்தப்பட வேண்டுமெனவும் அதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் பணிப்பாளர் இஸட் தாஜுடீன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :