இறைவனின் ஏகத்துவத்தை நிலைநிறுத்துவதற்காக நபி இப்ராஹிம் (அலை) அவர்கள், அன்னை ஹாஜரா (அலை) அவர்கள், இஸ்மாயில் (அலை) அவர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து மேற்கொண்ட தியாகத்தின் வரலாற்றை நினைவு கூறுகின்ற இன்றைய தியாத்திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காகவும் முஸ்லிம் நாடுகளின் அமைதி சமாதானம் சுபீட்சத்திற்காகவும் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம் என்று மில்பர் கபூர் மன்றத்தின் ஸ்தாபகரும் அம்மன்றத்தின் தலைவரும், பேருவளை நகரசபைத் தலைவருமான மில்பர் கபூர் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
ஹஜ் வணக்க வழிபாடுகள் ஒவ்வொன்றும் நபி இப்றாஹிம் (அலை) அவர்களினதும் அன்னாரது குடும்பத்தினரதும் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் எமக்கு நினைவூட்டுகின்றது. அதேநேரம் பொறுமை, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, பரஸ்பரம் ஒருவருகொருவர் உதவி ஒத்தாசை புரிதல் போன்ற இன்னோரென்ன நற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டாகவும் அவை விளங்குகிறது. அதேநேரம் முழு மனித சமூகத்திற்கும் அந்த வரலாறு படிப்பினையையும், தூதையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறு மகத்துவமிக்க வரலாறு உலக முஸ்லிம்களின் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையும் வருடாந்தம் வெளிப்படுத்துகின்ற சர்வதேச மாநாடாகவும் விளங்குகின்றது.
இதனூடாக முழு முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை உலகிற்கு எடுத்துக் காட்டப்படுகிறது. அந்த ஒற்றுமையின் அடிப்படையில் பேதங்களை மறந்து சகோதரர்கள் போன்று சகல முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும், இதர சமூகங்களோடு புரிந்துணர்வோடும் பரஸ்பர நல்லுறவோடும் வாழ்வதற்காகவும் நாட்டின் சுபீட்சத்திற்காகவும் இன்நன்நாளில் பிரார்த்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

.jpg)
0 comments :
Post a Comment