கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கீன் பன்முகப்படுத்தப்பட்ட மாகாண நிதி ஒதுக்கீட்டில் பாலர் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
புதிய காத்தான்குடி அப்றார் பாலர் பாடசாலை ,புதிய காத்தான்குடி அன்வர் பாலர் பாடசாலை,புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் ஹெபி கிட்ஸ் பாலர் பாடசாலை என்பனவற்றுக்கு பாலர் பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் காத்தான்குடி பிராந்திய பணிமனையில் 13-10-2014 இன்று திங்கட்கிழமை மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தலைமையில் நடைபெற்ற விஷேட நிகழ்வில் இந்த உபகரணங்களை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,பிரதியமைச்ர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் ,ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர் எம். கரீம் ,முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சலீம் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment