2014ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற மலாலா, இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு

2014ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் மலாலா, அதற்கான பரிசளிப்பு விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நோர்வே நாட்டை சேர்ந்த நோபல் பரிசளிப்புக்குழுவினர் 2014ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை இந்தியாவின் குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த் மற்றும் பாகிஸ்தானின் பெண் கல்வி ஆர்வலர் மலாலா யூசுப் சாய் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்தியர் ஒருவரும் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் கல்விக்காகவும், குழந்தைகளின் நலனுக்காகவும் பொதுவான போராட்டத்தில் இணைந்திருப்பது முக்கியத்துவமானது என நோபல்.பரிசு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நோபல் பரிசு பெற்றது குறித்து கருத்துதெரிவித்துள்ள மாலாலா இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவை வலுப்படுத்த சத்யார்த்தியுடன் இணைந்து பாடுபடுவது என முடிவெடுத்துள்ளதாகவும், இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி மற்றும் வளர்ச்சிக்கான வலுவான உறவை ஏற்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒஸ்லோ நகரில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்கும் படி இந்திய பிரதமர் மோடி மற்றும் பாக்., பிரதமர் நவாஸ்ஷெரீப் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கஇருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.<வீ.கே>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :