அஸ்ரப் ஏ சமத்-
இலங்கையில் உள்ள பலஸ்தீன தூதுவர் சுகையிர் மொஹமட் ஹம்துல்லா டார் சயிட் தான் இஸ்ரேவேலர்களால் 14 வருடம் சிறை பிடிக்கப்பட்டு துண்பங்களையும் சித்திரவதைகளையும் அனுபவித்த ஒரு ராஜதந்திரி. அவர் நேற்று மாளிகாவத்தை தேசிய வை.எம்.எம்.ஏ வைத்து மேடையில் தான் பட்ட துண்பங்கள் தனது நாட்டு முஸ்லீம் சகோதரர்கள் அனுபவிக்கும் இண்னல்களை கதைத்து கண்னீர் மல்கினார்.
அவர் இஸ்ரேவேலில் 14 வருடம் சிறை பிடிக்கப்பட்டதால் அவர் இஸ்ரேவேலர்களை மொழி மற்றும் அவர்களது வெப்தளம் செய்திகள் சகலதையும் ஆரய்ந்து ஆரச்சி செய்யும் ஓருவர்.
அவர் அங்கு உரையாற்றுகையில் இலங்கை எனது 2 வது தாய் நாடு. இந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மட்டுமே அண்மையில் பலஸ்தீன சுய நாடாக வருவதற்கு ஜக்கிய நாவில் மாநாட்டில் குரல் கொடுத்தவர். அத்துடன் 2 மில்லியன் அமேரிக்க டொலரை காசா குழந்தைகளுக்காக வழங்கியதற்காகவும் தூதுவர் நன்றி தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு பேசுகையில் முஸ்லீகளாகிய நீங்கள் இந்த நாட்டின் வாழும் ஏனைய இனங்களுடன் ஜக்கியமாகவும் சமாதானமாக வாழுங்கள். நாம் மற்ற இனத்தை பகைத்துக்கொள்ளக் கூடாது. அதனாலேயே நாங்கள் துண்பமாக வாழ்நந்து வருகின்றோம். என வேண்டிக் கொண்டார்.
கடந்த வாரம் சிங்களவர் ஒருவர் எனது தூதுவர் ஆழுவலகத்திற்கு வந்து உங்களது நாட்டின் பிள்ளைகளுக்காக அவரது துக்கத்தை தெரிவித்து 5ஆயிரம் ருபாய் தந்து இதனை உங்களது பிளளைகளுக்கு அனுப்பி வையுங்கள் என சொல்லிச் சென்றார்.
மாளிகாவத்தை வை.எம்.ஏ இயக்கம் கொழும்பில் சேகரித்த 2 மில்லியன் ருபா பெருமதியான பால், மற்றும் பிஸ்கட் தேயிலை போன்ற வற்றை சேகரித்து காசா குழந்தைகளுக்காக தூதுவரிடம்; கையளித்தனர். ஆனால் அதனை அனுப்ப முடியாத நிலையில் அவர் காணப்பட்டார்.
ஜனாப் எஸ்.பி தாசீம் மற்றும் தேசிய வை.எம்.எம்.ஏ தலைவர் மொஹமட், உப தலைவர் பெரோஸ்நூன் பாராளுமன்ற உறுப்பிணர் ஏ.எச்.எம் அஸ்வர் ஆகியோர் எகிப்து நாட்டின் தூதுவர் ஊடகாக அதனை அனுப்பிவைப்பதாகவும் அதனை அங்கிருந்து ஜேர்தான் நாட்டுக்கு தரை மார்க்க மாக அனுப்புவதற்கு முயற்சி எடுப்பதாக எஸ்.பி தாசீம் தெரிவித்தார்.
ஏ.எச்.எம் அஸ்வர் (பா.உ) – பலஸ்தீனத்pற்காக காலம்சென்ற கலாநீதி டி.பி ஜாயா காலாத்தில் இருந்து இலங்கை முஸ்லீம் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஜனாதிபதி அவர்கள் பலஸ்தீனத் தலைவர் அப்பாசை சந்தித்து மிகவும் ஆழமாக பேசினார்கள். ஜ.நா.வில் 50க்கும் மேற்பட்ட அரபு நாடுகள் இருந்தும் பலஸ்தீன நாட்டுக்கு சுய நிர்ணய உரிமை கெர்டுப்பதற்கு முஸ்லீம் அலலாத ஒருவர் அதுவும் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மட்டுமே அங்கு பேசினார். அவர் 25 வருட காலமாக பலஸ்தீன் நற்புரவு சங்கத் தலைவராக செயல்பட்டார். என உரையாற்றினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment