முகம்மட் அமீர் ஹஸன்-
முத்துப்பேட்டையை சேர்ந்தவர் கஜ்ஜாலி. இவரது மகன் முஹம்மது ரஹூப் ( வயது 12 ). ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று தனது இரு சக்கர வாகனத்தில் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் கிராமத்தின் அருகே சென்ற போது அங்கு மறைந்து சமூக விரோதிகளால் அந்த மாணவனை வழி மறித்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடி விட்டதாக தெரிகிறது.
இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த சிறுவனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக தற்போது தஞ்சை தனியார் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
உடனே முத்துப்பேட்டை காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமுமுக மாவட்ட துணை தலைவர் முகம்மது அலீம் அவர்கள் தலைமையில் காவல் நிலையம் சென்று DSP கணபதி மற்றும் இன்ஸ்பெக்டர் சண்முக வேல் அவர்களை சந்தித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் தெரிவித்தோம்.நடவடிக்கை இல்லை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment