தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள கமு/சது/அல்-முனீர் வித்தியாலயத்தில் 06 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதன் அடிப்படையில் எம்.வீ.எம்.அஸ்வின் 169 புள்ளிகளையும், ஏ.எப்.றுபைதா 169 புள்ளிகளையும், எம்.ஏ.ஜெ.இல்மாசபா 166 புள்ளிகளையும், எம்.டி.எம்.இஸ்றத் 164 புள்ளிகளையும், எஸ்.எப்.ஹினா 163 புள்ளிகளையும், ஏ.எஸ்.ஹுஸ்னி 158 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை அல்-முனீர் வித்தியாலய அதிபர் கே.எம்.ஏ.முத்தலிப், அம்மாணவர்களை கற்பித்த அசிரியர்களான வீ.யூ.எம்.மக்கீன், எஸ்.எல்.சஹிதா, ஏ.கே.அமிறா உம்மா ஆகியோரிற்கு மாணவர்களும், பெற்றோர்களும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

0 comments :
Post a Comment