காணாமல் போயுள்ள ரிஸானாவின் புத்தகப் பை கண்டெடுக்கப்பட்டது!

கெக்கிராவ பிரதேசத்தில் காணாமல் போனதாக்க் கூறப்படும் முஸ்லிம் மாணவியான ஏ. ரிஸானா என்ற மாணவியின் புத்தகப் பை கலாவெவ மீனவர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் காணப்பட்ட கைத்தொலைபேசிக்கான இரண்டு சிம் அட்டைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

15 வயதான குறித்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் கெக்கிராவ பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையிலேயே அவரது என நம்பப்படும் புத்தகப் பையினை பொலிஸார் மீட்டுள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவியின் நிலைமை பற்றி இதுவரை தகவல் இல்லை.

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் நெத் எப்.எம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :