ஊவா மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக ஜே.வி.பியுடன் இணைந்து செயற்படத் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே ஹரின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தேவைப்பட்டால் முதலமைச்சர் பதவியை கூட துறக்கத் தயார். ஆளும்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சசீந்திர ராஜபக்ஷ ஊவாமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டார், சிறிய விடயங்களை கூட சரிசெய்ய தவறிவிட்டார்.
அவர் சிறிய விடயங்களில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு சிறுவர்களுக்கு சிறியளவு பாலை வழங்குவது. அதனால் மக்களுக்கு பலன் கிடைத்திருக்கும். நாட்டின் உல்லாச பயணத்துறைக்கு ஊவா மாகாணம் ஆற்றியிருக்க கூடிய பங்களிப்பையும் அரசாங்கம் கணக்கிலெடுக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட இரு கட்சிகளும் பொதுவான இலக்கை நோக்கி செயற்படுகின்றன. இது குறித்து பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment