மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் வாழும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினால்; இலவசமாக கிணறுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
வசதி குறைந்த குடும்பங்களும் நீரை இலகுவாக பெற வேண்முமென்ற நோக்கில் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மனித நேய உதவித் திட்டத்தின் கீழ் இவ் இலவச கிணறுகள் வழங்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன் ஓர் அங்கமாக மட்டு-மாவட்டத்தில் ஏறாவூர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒரு தொகுதி தமிழ் முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்ட கிணறுகளை கையளிக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.எல்.எம்.குறைஷ் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்ட கிணறுகளை உரிய பயணாளிகளிடம் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர் பி.ரீ.எம்.பாரூக் ஜேபி கையளித்தார்.
இங்கு 105 தமிழ் முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்ட கிணறுகள் கையளிக்கப்பட்டது.
குறித்த ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்; 1000 வசதி குறைந்த குடும்பங்களுக்கு இலவச கிணறுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின்; ஒருங்கிணைப்பாளர் டி.எல்.எம்.குறைஷ் ஜேபி தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment