தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று PHI காரியாலய திட்டங்கள்




நிஸ்மி, அக்கரைப்பற்று-

நாடளாவிய ரீதியில் கடந்த 10ம் திகதி முதல் 16ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தி வுருகின்றது.

இந்த செயற்றிட்டத்தின் நான்காவது நாளான நேற்று (13.09.2014) சனிக்கிழமை தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் சுத்திகரிப்பு நாளாகும். இதனை முன்னிட்டு அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த மத்திய பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலுள்ள மரம் அரியும் தொழிற்சாலைகள், கைத் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் சுத்திகரிக்கும் நடவடிக்கைகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எச்.பஹ்மி தலைமையில் மலேரியா தடைப் பிரிவைச் சேர்ந்த எம்.எல்.சமூன், பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவு பொலிஸ்; உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.காஸீம், இராணுவ முகாமைச் சேர்ந்த கோப்ரல் கே.வீரக்கோன் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.

இதன்போது மரம் அரியும் தொழிற்சாலைகள், கைத் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் முதலியவற்றிற்கு சென்ற இக் குழுவினர் அவை அமைந்துள்ள இடத்தின் சுற்றுச் சுழலை பார்வையிட்டதோடு, சுழலை சுத்திகரிக்க நடவடிக்கை மேற் கொண்டதோடு, சுழலை சுத்தமாக வைத்திருக்குமாறும், மரம் அரியும் தொழிற்சாலைகள், கைத் தொழிற்சாலைகள் இதற்குப் பொறுப்பாக ஒருவரை நியமித்து சுழலைச் சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை மேற் கொள்ளுமாறும் அறிவுரைகள் கூறினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :