தலைவர் தினத்தையொட்டி கல்முனை தொகுதியில் உள்ள தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி-ஹரீஸ் MP

கல்முனை -யு .எம்.இஸ்ஹாக்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ஷஹீத் எம்.எச்.அஸ்ரப் அவர்களின் 14வது நினைவு தினத்தையொட்டி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் " தலைவர் தினமாக செப்டம்பர் 16 திகதியை பிரகடனம் செய்து வாரம் முழுவதும் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக இன்று இரவு அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இப்பிரகடனத்தை வெளியிட்டார் .

தலைவர் தினத்தையொட்டி கல்முனை தொகுதியில் 30 இடங்களில் ஞாபகார்த நினைவு தின நிகழ்வுகள் இடம் பெறவுள்ளதாகவும் அதன் போது 14 ஆன் திகதி காலை ஞாபகார்த உரைகள் மர நடுகை என்பனவும் இடம் பெறவுள்ளது.
மாலை வேளை கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்களில் கத்தமுல் குரான் தமாம் வைபவமும் இடம்பெற ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக ஹரீஸ் MP அங்கு தெரிவித்தார்

இந்த தலைவர் தின பிரகடனத்தையொட்டி நாளை திகட் கிழமை (15) ஒலுவில் ,மாளிகை காடு ,சாய்ந்தமருது பிரதேசத்தில் பிரமாண்டமான அபிவிருத்திப் பணிகள் தொடக்கி வைக்கப் படவுள்ளன . மறுநாள் 16 ஆந் திகதி விளையாட்டு மைதானம், பிரதான வீதி மின் விளக்கு திட்டம் திறந்து வைத்தல்,பாடசாலை அபிவிருத்திப் பணிகள் ,புதிய மையவாடி ,உள் வீதிகள் நிர்மாணம் என்பன இடம் பெறவுள்ளன . அதனை தொடர்ந்து ஒருவாரமாக் கல்முனை தொகுதியின் சகல பகுதிகளிலும் பல திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப் படவுள்ளது.

குறிப்பாக தலைவர் தினத்தையொட்டி முதல் தடவையாக கல்முனை தொகுதியில் உள்ள தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கி அந்த வேலை திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப் படும் என்று ஹரீஸ் MP தெரிவித்தார் .

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் இடம் பெறவுள்ள தலைவர் தின நிகழ்வில் ஹரீஸ் MP பிரதம அதிதியாக கலந்து கொள்வதாகவும் அங்கு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :