விவசாய்களின் தேவைகளை கேட்டறிந்து கொள்ள நேரில் வந்த விவசாயம் அமைச்சர் மஹிந்த யாப்பா

 ம்.ஐ.பிர்னாஸ்,யு.எல்.ஹம்மாத்-

காரைதீவு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள விவசாயிகளின் தேவைகளை கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு நேற்று மதியம் (27.09.2014) மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலய மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருகை தந்த விவிசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளுயு.டீ.வீரேசிங்க,தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஏ.எம்.ஜாஹிர் ,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியக இணைப்பாளர் எம்.ஐ.றியாஸ் உள்ளிட்ட அதிதிகள்,அதிகாரிகள் வரவேற்கப்பட்டனர்.

விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக காரைதீவு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சிதம்பரநாதன் உரையாற்றியதோடு,விவிசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான மகஜரினை எம்.ஐ.அப்துல் ஜப்பார் அமைச்சரிடம் வைழங்கி வைத்தார்.பாராளுமன்ற உறுப்பினர் பியசேன காரைதீவு கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் அபிவிருத்திக்காக 17 இலட்சம் ரூபாவினை ஒதுக்கியது விடயமாக விவசாயப்பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள்,விவசாய பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :