அட்டாளைச்சேனை கோணாவத்தை வடிச்சல் திட்டத்திற்கு இரண்டு மில்லியன் ரூபா நிதி





சலீம் றமீஸ்-

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும், நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் வேண்டுகோளின் பேரில் சம்புக்களப்பு, கோணாவத்தை வடிச்சல் திட்டத்திற்கென இரண்டு மில்லியன் ரூபா நிதி வழங்குவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்வீஸ் உறுதியளித்துள்ளார்.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அட்டாளைச்சேனை சம்புக்களப்பு,வள்ளக்குண்டு நீர்ப்பாசன வடிச்சல் திட்டங்கள், கோணாவத்தை அபிவிருத்தி தி;ட்டத்தை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் அழைப்பை ஏற்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்வீஸ் அட்டாளைச்சேனைக்கு விஜயம் செய்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் வடிச்சல் திட்டத்தினை பார்வையிட்ட பின்னர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சம்புக்களப்பு, கோணாவத்தை அபிவிருத்திக்கா இரண்டு மில்லியன் ரூபா நிதி தருவதாக உறுதியளித்தார்.

சம்புக்களப்பு , வள்ளக்குண்டு வடிச்சல் திட்டங்கள் மற்றும் கோணாவத்தை அபிவிருத்தி மூலம் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை , ஒலுவில், பாலமுனை பிரதேச விவசாயிகள் பெரிதும் நன்மை அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, அம்பாரை பிரதி திட்டமிடப்பணிப்பாளர் ஐ.எல.தௌபீக்,மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் நஜீப், அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.ஐ.எம்.இஸட்.இப்றாஹீம் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள மூவின விவசாயிகளின் அதாவது மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வகிக்கின்ற நீர்ப்பாசனத் திட்டங்கள், விவசாய வீதிகள், குளங்கள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின்; வழிகாட்டலில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :