அட்டாளைச்சேனை பைஷல் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்.

ஏ.எல்.நபார்தீன் -


ட்டாளைச்சேனை முதலாம் குறிச்சியைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் முஹம்மது பைஷல் முழு தீவுக்குமான ஓரு சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

மீனோடைக்கட்டு பிரதேச சுடர் ஒளி பத்திரிகையின் முகவராகவும், ஊடகவியலாளராகவும் செயற்படும் இவர் அட்டாளைச்சேனை முதலாம் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கம், லக்கி விளையாட்டுக் கழகம், தேசிய ஜக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் போன்றவற்றின் செயலாளராகவும், மஸ்ஜிதுல் பலாஹ் (ஏ.சீ) பள்ளிவாயலின் ஊடக இணைப்பாளராகவும் செயற்பட்டுவருகின்றார்.

அக்கரைப்பற்று மற்றும் மடவளை மதீனா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரும் மாணவர் சங்க தலைவராகவும் செயற்பட்ட இவர் மர்ஹூம் ஏ.எல்.முஹம்மது இஸ்மாயில், ஆதம்வாவா பரிதா உம்மா ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :