த.நவோஜ்-
வாகரை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக சேவையாற்றி வந்த வேலாயுதபிள்ளை நவீரதன் கடந்த 01ம் திகதி முதல் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவால் சிரேஷ்ட உதவி பதிவாளராக கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வாகரை பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினரால் இவரை பாராட்டி கௌரவித்து வழியனுப்பி வைக்கும் நிகழ்வு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்ற போது பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
தேத்தாத்தீவை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கடந்த காலங்களில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவி விரிவுரையாளராகவும், அபிவிருத்தி உதவியாளராகவும், சமூக சேவை உத்தியோகத்தராகவும், உதவித் திட்டமிடல் பணிப்பாளராகவும் கடமையாற்றி வந்துள்ளதோடு, இவர் ஒரு முதுநிலை பயிற்றுவிப்பாளராகவும் இருந்து சேவையாற்றி வருபவர்.
அத்துடன் அகில இலங்கை சமாதான நீதவானாக இருந்த சமூக சேவையாற்றி வரும் இவர் பொருளாதார, திட்டமிடல் துறைகளில் நூல்களை வெளியீட்டும் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment