ஹாசிப் யாஸீன், பி.முஹாஜிரீன் -
பிரதேச செயலகங்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி வெற்றி பெற்று சம்பியனானது.
அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்கிடையில் அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் நேற்று பாலமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டிகளை நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட சாய்ந்தமருது பிரதேச செயலாளரும், அக்கரைப்பற்று பதில் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்;.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலக நிதி உதவியாளர் எம்.சீ.முஹம்மட், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் எம்.எம்.நஜிமுதீன், அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜூதீன், அக்கரைப்பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம். அஸ்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுற்றுப்போட்டியின் முதல் போட்டி சாய்ந்தமருது பிரதேச செயலக அணியினருக்கும், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியினருக்குமிடையில் இடம்பெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 152 ஓட்டங்களைப் பெற்றனர்;.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரதேச செயலக அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 90 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தனர். இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியினர் 62 ஓட்டங்களை வெற்றி பெற்றனர்.
சுற்றுப்போட்டியின் இரண்டாம் போட்டி அக்கரைப்பற்று பிரதேச செயலக அணியினருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியினருக்குமிடையில் இடம்பெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 143 ஓட்டங்களைப் பெற்றனர்;.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று பிரதேச செயலக அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தனர். இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியினர் 72 ஓட்டங்களை வெற்றி பெற்றனர்.
சுற்றுப்போட்டியின் மூன்றாம் போட்டி அக்கரைப்பற்று பிரதேச செயலக அணியினருக்கும் சாய்ந்தமருது பிரதேச செயலக அணியினருக்குமிடையில் இடம்பெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று பிரதேச செயலக அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 64 ஓட்டங்களைப் பெற்றனர்;.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரதேச செயலக அணியினர் 8.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றனர்.
சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி சாய்ந்தமருது பிரதேச செயலக அணியினருக்கும், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியிருக்குமிடையில் இடம்பெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 73 ஓட்டங்களைப் பெற்றனர்;.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரதேச செயலக அணியினர் 10 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 45 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தனர். இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணயினர் 28 ஓட்டங்களால் வெற்றி பெற்று சுற்றுப்போட்டியின் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டனர்.
இச்சுற்றுப்போட்டியில் சாய்ந்தருது பிரதேச செயலக அணியினர் இரண்டாம் இடத்தையும், அக்கரைப்பற்று பிரதேச செயலக அணியினர் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்;.
வெற்றி பெற்ற அணியினருக்கான பரிசில்களை நிகழ்வின் பிரதம விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய அணிகள் தங்களது வெற்றிகளை கேக் வெட்டி வீரர்களுடன் மைதானத்தில் பகிர்ந்து கொண்டனர்.
சுற்றுப்போட்டியினை சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.வீ.எம்.றஜாயின் தலைமையில் பிரதேச செயலக அணியினர் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment