ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை நோக்கி நகர்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைத் தழுவும் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் தலைவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்தும் முயற்சிகளில் திஸ்ஸ அத்தநாயக்க ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் இறுதி நேரத்தில் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.குத
.jpg)
0 comments :
Post a Comment