பின்தங்கிய மாணவர்கள் அதிகம் கல்வி பயிலும் சம்மாந்துறை கமு/சது/ அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் கல்வி சூழலை மேம்படுத்தும் நோக்கில், ரூபாய் நான்கு இலட்சம் பெறுமதியான நவீன மின்விளக்கு தொகுதிகள் இன்று (02) வழங்கப்பட்டன.
இத்தொகுதிகளை சம்மாந்துறை “வன் என் வன்” டிரான்ஸ்போர்ட் சங்கத்தின் பிரதிநிதிகள், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
யானை தாக்குதலில் இருந்து பாடசாலையை பாதுகாக்கவும் பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், மாணவர்கள் சிறந்த கல்வி சூழலில் பயிலும் வகையிலும் இந்த நவீன மின்விளக்கு தொகுதிகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் தொடர்புடைய தரப்பினரும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். பாடசாலையில் இந்த நவீன மின்விளக்கு தொகுதிகளை சம்மாந்துறை பிரதேச சபை ஊடாக பொருத்தும் நோக்கில் இந்த மின்விளக்கு தொகுதிகள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளாரிடம் கையளிக்கப்பட்டது
இத்தகைய சமூகப் பொறுப்புணர்வு செயல்கள் கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன என்பதையும், எதிர்காலத்திலும் இதுபோன்ற உதவிகள் தொடர வேண்டும் என்பதையும் கல்வி வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.

0 comments :
Post a Comment