உயர்தரப் பரீட்சையில் சிறப்பு சாதனை! நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முன்னிலை!!



எம்.எஸ்.எம். ஸாகிர்-
2025 (2026) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் பல துறைகளில் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர்.

உயிரியல் விஞ்ஞானம் (மருத்துவத் துறை) பிரிவில்,
ஆர்.ஏ. கைஸான் – 3A சித்தியுடன் அம்பாறை மாவட்டத்தில் இரண்டாம் இடம்
எம்.என்.ஏ. அப்துல்லாஹ் – 3A சித்தியுடன் மூன்றாம் இடம்

மேலும், பொறியியல் தொழில்நுட்பத் துறையில்,
எம்.எஸ்.எம். ஹப்னி – 2A, 1B சித்தியுடன் மாவட்டத்தில் நான்காம் இடம் பெற்றுள்ளார்.

இந்த பெறுபேறுகள் மூலம் மாணவர்கள் தங்கள் பாடசாலைக்கும், தங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதற்கு மேலாக, இப்பாடசாலையில் இருந்து இம்முறை மொத்தமாக 49 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பிரிவுகளின் விவரம் பின்வருமாறு:
உயிரியல் விஞ்ஞானம் (மருத்துவம்) – 05 பேர்
உயிரியல் விஞ்ஞானம் (ஏனைய) – 16 பேர்
பௌதீக விஞ்ஞானம் (பொறியியல்) – 02 பேர்
பௌதீக விஞ்ஞானம் (ஏனைய) – 08 பேர்
பொறியியல் தொழில்நுட்பம் – 02 பேர்
வர்த்தக முகாமைத்துவம் – 08 பேர்
கலைத்துறை – 08 பேர்

இந்த மாணவர்களின் சாதனையை பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர், ஆசிரியர்கள் மற்றும் அல்-அஷ்றக் பாடசாலை சமூகத்தினர் பாராட்டி, தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :