இலங்கையில் பௌத்தர்களின் பயங்கரவாதம் கிடையாது- ஞானசார தேரர்

லங்கையில் பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிராகத் தலைதூக்கியுள்ள முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பில் கண்களை மூடிக் கொண்டு உலகில் பௌத்த பயங்கரவாதம் தலைதூக்கி வருவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்த கருத்தானது கவலைக்குரியதாகும் எனத் தெரிவித்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இலங்கையில் பௌத்தர்களின் பயங்கரவாதம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவிக்கையில்;

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் பொறுப்பான பதவி வகிப்பவர். அவ்வாறானவர் பொறுப்பற்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடக்கூடாது.

எதையாவது கூற வேண்டுமானால் சிந்தித்து புத்திக் கூர்மையுடன் தெரிவிக்க வேண்டும்.

உலகில் பௌத்த பயங்கரவாதம் தலைதூக்கி வருவதாகவும் இலங்கையில் இவ்வாறான பௌத்த பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதோடு சிறுபான்மை இன மதங்கள் ஒடுக்கப்படுவதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்த கருத்து கவலைக்குரியதாகும்.

இலங்கையில் பௌத்த பயங்கரவாதம் கிடையாது மாறாக முஸ்லிம் அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் சேர்ந்து பௌத்த இந்த மதங்களை ஒழிப்பதற்கான சதித்திட்டங்களை முன்னெடுக்கின்றது.

ஆனால் நாம் இந்துக்களையும் இணைத்துக்கொண்டு அம் மதத்தை பாதுகாக்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.

உலகமே இன்று முஸ்லிம் பயங்கரவாதத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எங்கும் பௌத்த பயங்கரவாதம் இல்லை. பௌத்தர்கள் அஹிம்சையை கடைப்பிடிப்பவர்கள். பயங்கரவாதிகள் அல்ல என்பதை ஐ.நா. செயலாளர் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :