சுயதொழில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நிஸ்மி-

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த அமுலாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தினால் அக்கரைப்பற்றில் நடாத்தப்பட்ட சுயதொழில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன் தினம் (13.09.2014) சனிக்கிழமை நடைபெற்றது

அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.கலீலுர் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இங் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரும், மாகாண உள்ளுராட்சி, கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்கள் கலந்து கொண்டதோடு,கௌரவ அதிதியாக மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கே.அருந்தவராஜ, அதிதிகளாக அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை பிரதேசங்களுக்கான கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி வழங்கிய வளவாளர்கள், தையல் பயிற்சி ஆசிரியைகள், பயிற்சியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின்போது பெண்களுக்கான கைப்பைகள், பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள், அழகுக் கலை (பியூட்டி கல்சர்) முதலிய பயிற்சிகளைப் பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ்களை நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரும், மாகாண உள்ளுராட்சி, கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான யூ.எல்.ஏ.அஸீஸ், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கே.அருந்தவராஜா, மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.கலீலுர் hஹ்மான் மற்றும் வளவாளர்கள் வழங்கி வைத்தார்கள். 

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த அமுலாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண முதலமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை மவட்டங்களில் தலா மூன்று பயிற்சி நெறிகள் நடாத்தப்பட்டது என்பதோடு பெண்களுக்கான கைப்பைகள், பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள், அழகுக் கலை (பியூட்டி கல்சர்), கைத் தொலைபேசி தீருத்தம்முதலிய பயிற்சிகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :