ஜனாதிபதி தேர்தலில்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிட முடியாது - சுனில்

வா மாகாண சபை தேர்தலின் பின்னர் நடைபெறவுள்ளதாக கூறப்படும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு போட்டியிடுவதற்கு காணப்படும் தடைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

மக்கள் விடுதலை முன்னணி, மேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல இது தொடர்பில் விளக்கமளித்தார்.

து தெளிவான சட்ட விவாதமாகும். நாட்டில் பொருட் கோடல் கட்டளை சட்டம் என்ற சட்டம் உள்ளது. இந்த கட்டளை சட்டத்திற்கு அமைவாக கடந்த காலங்களுக்கு செல்லுப்படியாகும் வகையில் சட்டத்தை நெறிப்படுத்த முடியாது.18 ஆவது அரசியலமைப்பு என்பது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தை புறம்தள்ளிய திருத்தமாகும். ஆனால் இந் திருத்தத்தைக் கொண்டு வரும் போது அதில் உள்ளடக்கப்பட வேண்டிய ஒரு விடயத்தை மறந்து விட்டனர். அதாவது கடந்த காலங்களுக்கும் செல்லுப்படடியாகும் அல்லது உள்ளடங்கும் எனற விடயத்தை உள்ளடக்க மறந்து விட்டனர். ஏனெனில் தற்போதைய ஜனாதிபதி 17ஆவது அரசியலமைப்பின் அடிப்டையிலேயே பதவி பிரமானம் செய்துக் கொண்டுள்ளார்.
 அப்போது 18ஆவது அரசியலமைப்பு வரவில்லை. இதனடிப்படையில் அரசியலமைப்பின் 31/2 பிரிவிற்கு அமைவாக இரண்டாவது பதவி காலத்தில் மாத்திரமே அவரால் இருக்க முடியும். ஆகவே தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் மூன்றாவது பதவிக்காலத்திற்காக ஜனாதிபதியால் போட்டியிட முடியாது.

நன்றி:- newsfirst
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :