தலைவர் அஸ்ரப் அவர்களது நினைவேந்தல் நிகழ்வும் தேசிய காங்கிரஸின் அபிவிருத்தி நிகழ்வும்!

சலீம் றமீஸ்-

தேசிய காங்கிரஸின் ஏற்பாட்டில் பாலமுனையில் மறைந்த பெருந்தலைவர் மாமனிதர் கலாநிதி  எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களது 14வது 'நினைவேந்தல்' நிகழ்வும், தேசிய காங்கிரஸின்  அரசியல் அதிகாரத்தினூடாக உள்ளுராட்சி,மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா  மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களின் முயற்சியினால் 14 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாலமுனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி  பணிகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், மேலும் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கும்  வைபவமும்; நாளை 16 ஆம் திகதி முழு நாளாக இடம் பெறவுள்ளது..

இந்த நிகழ்வுகளின் இறுதியில் 'நினைவேந்தல்' பொதுக்கூட்டம் பாலமுனை அல்- ஹிதாயா  வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும்இ கிழக்கு மாகாண சபை  அமைச்சரவையின் பேச்சாளருமான தேசகீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் அழைப்பின்  பேரில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான  ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சர்களின் இணைப்புச்  செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள்,  பிரதேச பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து  சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த அபிவிருத்தி திட்டம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் பாலமுனை பிரதேச  அரசயடி கொங்கிறீட் வீதி திறப்பு, ஊர்க்கரையோர கொங்கிறீட் வீதி திறப்பு, ஊர்க்கரையோர வீதியின் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பம், பனையடி விவசாய வீதி  அபிவிருத்தி பணிகள் ஆரம்பம், வன்னியப்பத்து விவசாய வீதி அபிவிருத்தி பணிகள்  ஆரம்பம், படாரக்கல் குளம் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம், ஹிறா நகர் வீடமைப்பு திட்டம்  மக்களிடம் கையளிப்பு, ஹிறா நகர் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கல், சின்னப்  பாலமுனை காபட் வீதி திறப்பு விழா, உதுமாபுர கிராம மின்சார திட்டம் திறப்பு,  ஹூசைனியா நகர் முகப்பு வீதி திறப்பு . மின்ஹாஜ் மகா வித்தியாலய உள்ளக வீதி ஆரம்பம்,  அல் ஹிதாயா வித்தியாலய உள்ளக வீதி ஆரம்பம், இதனைத் தொடர்ந்து பிற்பகல் பாலமுனை  அல் ஹிதாயா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் மறைந்த மாமனிதர் கலாநிதி எம்.எச்.எம்.அஸ்ரப்  அவர்களது நினைவேந்தல் நிகழ்வுக் கூட்டம் போன்றவை இடம் பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :