சலீம் றமீஸ்-
கடந்த யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேச செயலாளர் பிரவில் அமைந்துள்ள தஹராம்பளை பிரதேசத்தில் நீர்ப்பாசனத் திட்டங்கள், வீதி அபிவிருத்தி பணிகள், பாலம் நிர்மாணம் போன்ற அபிவிருத்தி திட்டங்கள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களின் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக தஹராம்பளை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விவசாய பாலம் திறந்து வைக்கப்பட்டதுடன், தஹராம்பளை விவசாய வீதி அபிவிருத்திக்கான பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் வைபவம் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் ஏ.பதுர்கான் தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எந்திரி.வி.கருணநாதன் , நீர்ப்பாசன மாகாணப் பணிப்பாளர் எந்திரி. எஸ்.திலகராஜா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாண பணிப்பாளர் எந்திரி.ஏ.எல்.எம்.நிசார், மாகாண பிரதி நீர்ப்பாசணப் பணிப்பாளர் எந்திரி. யு.எல்.எம்.நஸார், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை பிரதம பொறியியலாளர் எந்திரி எஸ்.மஹிந்தன், மத்திய நீர்ப்பாசன அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எந்திரி கே.டி. நிஹால் சிறிவர்த்தன, வீதி அபிவிருத்தி அதிகார சபை அக்கரைப்பற்று பிரதம பொறியியலாளர் எந்திரி.ஐ.எல்.ஏ.பாரி, அம்பாரை பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர்(மாகாணம்) பி.ரி.ஏ.ஜெயகுமார், நீர்ப்பாசன பொறியியலாளர்(மத்திய) டபிள்யு.யு.கே.சிரிவர்த்தன, கோமாரி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கேணல் சிறிசாந்த, அமைச்சர்களின் இணைப்புச் செயலாளர்களான சட்டத்தரனி எம்.எம்.பஹிஜ், எஸ்.எம்.சபீஸ், யு.எல்.உவைஸ், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ,றாசீக் உட்பட மத்திய, மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி திணைக்களங்களின் உயரதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment