போலி பேஸ்புக் : வவுனியா பொடியன் கைது

வுனியா பொடியன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கை இயக்கிய 16 வயதுடைய சிறுவனொருவனை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். காந்திவீதி - தோணிக்கல் - வவுனியா எனும் முகவரியைக் கொண்ட சிறுவனொருவனே இவ்வாறு வவுனியா பொடியன் என்ற பெயரில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் கணக்கொன்றை இயக்கி வந்துள்ளார். 

இந்தநிலையில் பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சாதாரணதரத்தில் கல்வி பயிலும் இம் மாணவன் குறித்த பேஸ் புக் கணக்கைப் பயன்படுத்தி வவுனியாவைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள், சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் என அறியப்பட்ட பலரையும் அவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்து வந்துள்ளார். 

இதனையடுத்து பொது மக்கள் வவுனியா பொடியன் என்ற கணக்கு தோணிக்கல்லில் இருந்தே இயக்கப்படுவதை அறிந்து சிறுவனின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். 

பின்னர் இப்பகுதி கிராம சேவகருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவர் மூலமாக வவுனியா பொலிஸாரிடம் குறித்த சிறுவன் ஒப்படைக்கப்பட்டிருந்தான். 

இதனையடுத்து சிறுவனைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :