த.நவோஜ்-
மட்டக்களப்பு செங்கலடி வேப்பையடி ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்திப் பெருவிழா எதிர்வரும் சர்வமங்கள ஐய வருடம் ஆவணித் திங்கள் 20ம் நாள் 05ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.35 மணி தொடக்கம் 9.05 மணி வரையுள்ள சுபமுகூர்;த்த வேளையில் நடைபெறவுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 7.35 மணி தொடக்கம் 9.05 மணி வரையுள்ள சுபமுகூர்;த்த வேளையில் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு மறுநாள் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6.02 மணி முதல் 6.38 மணி வரையுள்ள சுபவேளையில் ஸ்ரீ சக்தி விநாயகப் பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். பின்னர் தொடர்ந்து 11 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.
அனைவரையும் ஐங்கரன் அருள் பெறுவதற்கு ஆலயத்திற்கு வருகை தருமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக் கொள்கின்றனர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment