_Copy1.jpg)
ஹனான் முஹம்மட்-
ஹமீட் முனவ்வர் எழுதிய "மண்ணிலிருந்து விண்வெளிவரை அல்குர்ஆன்" மற்றும் "சூரியன் சுருட்டப்படும்போது கடல்கள் தீமூட்டப்படும்போது: அல்குர்ஆனில் இயேசுநாதர்" போன்ற இரு நூல்களும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நேற்று திங்கட்கிழமை மருதானை ஜம்மித்துஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு முன்னிலை வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேச்சாளராக கலந்துகொண்ட மெளலவி மாஹிர் அல்குர்ஆனும் விஞ்ஞானமும் குறித்து சிங்களத்தில் உரயைாற்றினார்.
பிரதம அதிதியாக கலந்துகொண்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முபாரக் நூல் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வுக்கு தலைமை வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினார். நன்றியுரையை மெளலவி முஜீப் நிகழ்த்தினார்.
அதன்பின்னர் நூலாசிரியர் ஹமீட் முனவ்வரினால் நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன. இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வையும், சிந்தனையையும் ஏற்படுத்தும்விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி., தொழில்துறை சார்ந்தவர்கள், மார்க்க அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் எச்.முனவ்வர் சுகயீனமுற்றிருந்தபோதும், இஸ்லாம் பற்றிய புரிதலை பல்லின மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும்நோக்கில் இலங்கை வந்து இந்த நூல்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இவர் கண்டி தந்துரையை பிறப்பிடமாகவும் மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்டவராவார்.
இந்த நூல்களை விரைவில் www.earthquran.com எனும் இணையத்தளத்தில் வாசிக்கலாம்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment