அல்-கொய்தா:இலங்கை தீவிர கவனம்

ல்-கொய்தா அமைப்பின் பிரிவை இந்திய துணைக்கண்டத்திலும் அமைக்க போவதாக அவ்வமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பில் இலங்கை தீவிர கவனம் செலுத்தி வருவதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகள் தீவுக்குள் நுழைவதை தடுப்பதற்கு விஸா கட்டுப்பாடுகள் மற்றும் விஸா மீளாய்வுகளை இலங்கை பரிசீலிக்க உள்ளது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல்-கொய்தா ஆதரவு பயங்கரவாதியான, அபுபக்கர் அல் பாக்தாதி தலைமையிலான, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஈராக்,சிரியா ஆகிய நாடுகளில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்ட எங்கள் அமைப்பினை இந்திய துணைக்கண்டத்திலும் ஏற்படுத்துவோம். தவிர பர்மா, வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் , இந்தியாவில் அசாம், குஜராத் , காஷ்மீர் ஆகிய இடங்களிலும் கிளையை நிறுவுவோம். ஏற்கெனவே பாகிஸ்தானில் உள்ள அல்-கொய்தா பிரிவிற்கு ஆசிம் உமர் தலைவராக உள்ளார்.

அதே போன்று, இந்திய துணைக்கண்டத்தில் கொய்தா -அல்-ஜிகாதி என்ற பெயரில் பிரிவை ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :