இன்னும் தீர்வின்றி தவிக்கும் மன்னார் மறைக்கார் தீவு மக்கள்

முசலியான்-

ன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட மறைக்கார் தீவு மக்களின் காணி பிரச்சினை கடந்த பல மாதங்கலாக இன்னும் தீராமல் நீதி மன்ற வழக்கில் உள்ளதால் இக்கிராம மக்கள் காணியின்றி பெரும் அவதிபட்டு வருவதாக மறைக்கார் தீவு கிராம தலைவர் தௌபிக் மௌலவி தெரிவித்தார்.

மறைக்கார் தீவு மக்களுக்கு எதிராக வன விலங்கு அதிகாரிகளினால் தொடரப்பட்ட வழக்கு இன்றுடன் நான்காவது தடவையாகவும் எடுத்து கொள்ளப்பட்டது. இருந்தும் மீண்டும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு வழக்கு ஓத்திவைக்கப்பட்டன. 

இவ்வாறு காலம் தாழ்த்தப்பட்டு வருவதனால் மன்னாருக்கு சென்று வருவதனால் பல சிறமங்களை எதிர் நோக்க வேண்டி வருவதாகவும் 100 க்கு மேல்பட்ட குடும்பங்களின் இருப்பிடம் தற்போதைய நிலையில் காணி மற்றும் வீடு இல்லாத நிலை எற்பட்டுள்ளதாகவும்.

மறைக்கார் தீவு மக்களின் காணி பிரச்சனை நாடறிந்த ஒரு பிரச்சனையாக காணப்பட்டது. இருந்தும் இன்னும் தீர்வு கிடைக்காத காரணத்தினால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலை எற்பட்டுள்ளது. 

எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையினை எடுத்து தீர்வினை பெற்று தறுமாறு வேண்டிக் கொள்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :