ஹமீட், ஷர்ஜாத்-
அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்குற்பட்ட ஒலுவில் வைத்தியசாலையில் கடமை நேரங்களில் வைத்தியர்கள் இருப்பதில்லை என்பதற்காக ஒலுவில் பொதுமக்கள் சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று விபத்துக்குள்ளான ஒருவரை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றதும் எந்த வைத்தியர்களும் இல்லை சற்றுதாமதியுங்கள் என்று கூறியுள்ளனர் பல மணி நேரம் விபத்துக்குள்ளானவருடன் காத்திருந்தவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்துவைத்தார்.
எது எவ்வாறாயினும் வைத்திய சாலை நோயாளிகளுக்கே கட்டப்படுகின்றன
எனவே அவசரமாக ஒரு நோயாளியைக் கொண்டுவரும்போது அதற்கான சிகிச்சையளிக்க வைத்தியர் இல்லை என்றால் சகிக்கமுடியமல்தான் இருக்கும் எனவே ஒருவைத்தியரையாவது மாறிமாறி வைத்தியசாலையில் தங்க வைப்பது சிறந்தது அல்லவா? இது நோயாளிகளுக்கும் சந்தோசமளிக்கும் என்பது இம்போட்மிரரின் கருத்து.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment