பைஷல் இஸ்மாயில் -
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 04 ஆம் பிரிவின் கிளைக் குழு நிர்மானிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.பி.எம்.ஏ.காதர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ், மு.காவின் உயர்பீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட், அட்டாளைச்சேனை மத்திய குழுவின் செயலாளர் எம்.ஏ.சி.ஹாரீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை 04 ஆம் பிரிவு மு.காவின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் மு.காவின் உயர்பீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட் ஆகியோர் கட்சி பற்றிய விளக்கத்தினையும், கிளைக்குழுவின் அவசியம் பற்றியும், கிளைக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புக்கள் எவ்வாறு அமையவேண்டும் என்று தெளிவுபடுத்தி உரையாற்றினர்.
இதன்போது அட்டாளைச்சேனை 04 ஆம் பிரிவு கிளைக்குழுவுக்கான உத்தியோகத்தர் தெரிவின்போது, அதன் தலைவராக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ், செயலாளராக பீ.ரி.ஏ.கரீம், பொருளாளராக யூ.கே.சனூஸ் மற்றும் உப தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிருவாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதேவேளை செயலாளராக தெரிவு செய்யப்பட்ட பீ.ரி.ஏ.கரீமிடம் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் அதன் ஆவணங்களை கையளித்தார்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment