த.நவோஜ்-
வாகரை வெள்ளையடிமடு பிரதேசத்தில் சிறிய வெங்காய விளைச்சல் நல்ல இலாபத்தை தந்துள்ளதாக கால்நடை மற்றும் விவசாயத்தில் நெடுங்காலமாக ஈடுபட்டு வரும் இளம் விவசாயி சீனித்தம்பி ரகுலேந்திரன் தெரிவிக்கின்றார்.
பரம்பரைத் தொழிலாக இது உள்ள படியால் தனது வீட்டில் செய்து வரும் வெங்காய செய்கையின் மூலம் விளைச்சல் வருடா வருடம் நல்ல இலாபத்தைத் தருவதாகவும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊக்குவிப்புக்களும், உதவிகளும் கிடைக்கும் பட்சத்தில் இன்னும் அதிகமாக சாதிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
வாகரைப் பிரதேசத்தில் கடும் வரட்சி, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்;ட போதும் தனது முயற்சியால் நல்ல விளைச்சலைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கும் இளம் விவசாயியான சி.ரகுலேந்திரன் சந்தோசம் ததும்ப அவர் மேலும் தெரிவித்தார்.
வாகரைப் பிரதேசத்தில் விவசாய முயற்சியில் ஈடுபடுவோர் இவரை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட்டால் மென்மேலும் வெங்காய விளைச்சலை வாகரைப் பிரதேசத்தில் மெருகூட்டிக் கொள்வதற்கு ஏதுவாக அமையும்.
இவரால் பயிரிடப்பட்ட சிறிய வெங்காயம் நாற்றுக்காக பிடுங்கி குவிக்கப்பட்டு காணப்பட்டிருந்தது.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment