e.Ffju;rd;-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை –கஜுவத்தையிலுள்ள கடற்படையினரின் வாகனம் மட்டக்களப்பு சென்று கொண்டிருந்த போது இன்று 3.30 மணியளவில் ஓட்டமாவடி பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது இதில் 4 கடற்படை வீரர்கள் காயமடைந்தனர் என்று வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த கடற்படை வீரர்கள் நால்வரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் மேலதிக சிகிச்சைக்காக மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
கடற்படை வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே இந்த விபத்து சம்பவிப்பதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. விபத்துத் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment