தமிழில்: கலைமகன் பைரூஸ்-
முஸ்லிம் பிரச்சினை தொடர்பில் இதற்கு முன்னொரு போதும் இல்லாத அரசியல் பிரச்சினை தற்போது நாட்டில் முளைத்தெழுந்துள்ளது.
அளுத்கமவில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான இனவாதப் பிரச்சினையும் அந்தப் பிரச்சினையின் ஒரு கெட்ட செய்தியே. அத்துடன் தற்போது அந்தப் பிரச்சினையானது பல்வேறு விதத்திலும் சமூக அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்நாட்டு இலக்கிய, கலாநிலையங்கள் கூட இதுதொடர்பில் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து நிற்கின்றன. அளுத்கம பிரச்சினையானது சர்வதேசத்திற்கு பாரிய தலைப்பாக இல்லாதபோதும் இந்நாட்டில் மாற்றுக் கருத்துடையோராக இருந்தோருக்கு பாரிய இனிப்பாகவும், பல்வேறு தேடல்களின் பால் செல்வதற்கு வழிசமைப்பதாகவும் அமைந்துள்ளது.இந்தக் கட்டுரையை எழுவதன் நோக்கம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி அலசுவதற்காக அல்ல.
இப்பிரச்சினையை வைத்துக்கொண்டு, பல ஆண்டுகளாக மாற்றுக்கருத்துடன் மற்றவர்களின் பிரச்சினைகளைக் கண்டு குளிர்காய நினைப்பவர்கள் பற்றி…. அவர்களிடத்து இருக்கின்ற மாற்றுச் சிந்தனைகள் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

0 comments :
Post a Comment