இலங்கை அரசைக் கண்டித்து, தமிழ்த் திரையுலகினர் போராட்டம்


மிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தொடர்பில் அவதூறு தகவல் வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து, தமிழ்த் திரையுலகினர் இன்று திங்கட்கிழமை கண்டனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் துவங்கியுள்ளது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். இதில் விஜய், சூர்யா, வினய் உள்ளிட்ட இளைய நடிகர்கள் உட்பட, சிவகுமார் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் வரை அனைவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மீனவர்கள் நலன் குறித்து எழுதும் கடிதங்களை காதல் கடிதங்கள் என்று கிண்டலடித்து கடந்த வாரம் இலங்கை அரசுக்கு சொந்தமான இணைய தளத்தில் கட்டுரை வெளியாகி இருந்தது. பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்குப் பிறகு அக்கட்டுரை நீக்கப்பட்டது. இலங்கை அரசு மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில்தான் இன்று இலங்கை அரசைக் கண்டித்து திரையுலகினர் இலங்கைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :