விஜய்க்கு ஏன் சூப்பர்ஸ்டார் பட்டம் நடக்க வில்லை- விளக்கம்

பிரபல வார இதழ் நடத்திய சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கான வாக்களிப்பு போட்டியில் இளையதளபதி விஜய் வென்றார். இதனையொட்டி அவருக்கு பட்டமளிப்பு விழா மதுரையில் நடத்த போவதாக அறிவித்து இருந்தது அந்த பிரபல வார இதழ்.

ஆனால் தமிழக அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தால் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் தர மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை திடிரென்று ரத்து செய்துவிட்டனர்.

இந்நிலையில் விழா ரத்தானதுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையில் இவ்விழாவை நடத்த விஜய்க்கு விருப்பமில்லை என்பது தான் உண்மை என்று தெரியவந்துள்ளது,

ஆனால் அவரின் நலம்விரும்பிகளுக்காக முதலில் ஒப்பு கொண்டார் என்பதும் உண்மை தான். அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் விஜய் அண்ணா என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வந்தனர்.

தனக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டும் விழாவுக்கு வருமாறு விஜய்யும் பல பிரபலங்களை செல்போன் மூலம் அழைத்தார் என்றும் ஒரு செய்தி இருக்க, இவ்விழா நாளை நடக்கும், விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் திடீர் என்று விழா ரத்து செய்யப்பட்டது.

தற்போது வந்த தகவல் படி இவ்விழாவை வேறொரு நாளில் நடத்த விஜய் தரப்பும், பத்திரிக்கை நிர்வாகமும் முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :