மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து விட்டு நாடு திரும்பும் முஸ்லிம் பெண்கள் அவர்களது பாரம்பரிய உடைகளை அணிந்து வருவதால் குடிவரவு, குடியகல்வு மற்றும் சுங்க அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக விமான நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து விட்டு நாடு திரும்பும் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி, ஏனைய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் அரபு முறையிலான உடைகளை அணிந்து இங்கு வருவதால் சிக்கலான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு (புர்ஹா) வருவதால் அவர்களது உண்மையான முக அடையாளத்தைக் காணபதில் சட்ட ரீதியான பாரிய பிரச்சினைகளைத் தேற்றுவித்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார் என குறித்த இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment