க.பொ.த. உயர்தரப் பரீட்சை நாளை 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாடெங்கிலும் 2120 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளதுடன் இதில் 2,96,313 பேர் தோற்றவுள்ளனர்.
இவர்களில் 2,34,197 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளாகவும் 62 ,116 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ள அதேவேளை பரீட்சை மேற்பார்வை மற்றும் உதவி நடவடிக்கைகளுக்கென 21000இற்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றும் மணவர்கள் பரீட்சை அனுமதி அட்டை மற்றும் ஆள் அடையாள அட்டையுடன் பரீட்சைக்குத் தேவையான எழுது கருவிகளை மாத்திரமே பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்லமுடியும் என்பதுடன் அவை தவிர்ந்த வேறு பொருட்களை உள்ளே கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு இம்போட் மிரர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.

0 comments :
Post a Comment