சென்னை சென்ற இலங்கை கனிஸ்ட கிரிக்கட் அணியினர் திருப்பி அனுப்பி வைப்பு

சென்னை சென்ற இலங்கை கனிஸ்ட கிரிக்கட் அணியினர் இன்றைய தினம் திருப்பி வைக்கப்பட்டுள்ளனர். கிரிக்கட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றிருந்த 16 பேரைக் கொண்ட குழாம் இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களைக் காண்பித்து குறித்த இலங்கைக் கிரிக்கட் வீரர்களும், பொறுப்பதிகாரிகளும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

15 வயதுக்கு உட்பட்ட அணியினர் இன்று முதல் 6ம் திகதி வரையில் நடைபெறவிருந்த போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை சென்றிருந்தனர். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இ;ந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவதூறு செய்யப்பட்டமைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டும் கால்பந்தாட்ட அணியினரையும் சென்னை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :