ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவே என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கூடிய ஆளுமை ரணில் விக்ரமசிங்கவிற்கே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியின் பொதுவான வேட்பாளராக தெரிவு செய்யக் கூடிய சகல தகுதிகளும் அனுபவமும் ரணிலுக்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ரணிலை விடவும் தகுதியானவர்கள் இருக்கின்றார்களாக என எதிர்க்கட்சிகள் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச தொடர்பு, பொருளாதார அபிவிருத்தி செய்யும் ஆற்றல், வருமானத்தை அதிகரித்துக் கொள்ள கொள்கை வகுக்கும் பாங்கு போன்ற பல்வேறு விடயங்களில் ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறந்த அனுபவ முதிர்ச்சியும் ஆற்றலும் காணப்படுவதாகவும் அதனை அனைவரும் அறிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக யாரைத் தெரிவது என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரையே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் செய்ய வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் நிலைப்பாடாகும் என அவர் தெரிவத்துள்ளார்.
2010ம் ஆண்டில் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்ட போது கூட அதிகளவான கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரைத் தெரியுமாறு கோரியிரந்தனர் என திஸ்ஸ அத்தநாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment