3வது தடவையாக யுவன் முஸ்லீம் பெண்ணுடன் நிக்கா

100 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார் யுவன் ஷங்கர் ராஜா. ஆனால் இவரது சினிமாவை வாழ்க்கையை போன்று குடும்ப வாழ்க்கை சிறப்பாக இல்லை. காரணம், சுஜயா என்ற லண்டன் தமிழ்ப்பெண்ணை 2005ல் திருமணம் செய்தார் யுவன். ஆனால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவருமே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதையடுத்து, அவுஸ்திரேலிய பெண்ணான ஷில்பா என்பவரை 2011ல் இரண்டாவது திருமணம் செய்தார் யுவன். அவர்களின் திருமணம் திருப்பதி கோயிலில் நடைபெற்றது. ஆனால் அவருடனும் யுவனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால், தற்போது ஷில்பா ஆஸ்திரேலியாவில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாராம்.

இந்த நிலையில், ஷில்பாவையும் விரைவில் விவாகரத்து செய்து விட்டு 3வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளாராம் யுவன். தற்போது முஸ்லீம் மதத்துக்கு மாறியுள்ள அவர், மூன்றாவதாக ஒரு முஸ்லீம் பெண்ணையே திருமணம் செய்கிறாராம். இந்த விவகாரம்தான் தற்போது யுவன் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு சமீபத்தில் யுவன் அளித்த பேட்டியில், இரண்டு திருமணங்களும் சரிவர அமையாததால் தான் தனிமையில் இருப்பதாக உணர்வதால், குடும்பமாக வாழ ஆசைப்படுவதன் காரணமாக 3வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறி உள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :