அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தினது ஆண்டுப் பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும்

ம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தினது ஆண்டுப் பொதுக்கூட்டம் 14.08.2014ஆம் திகதி வியாழக்கிழமை இன்று இணையக் கேட்போர் கூட மண்டபத்தில் தவிசாளர் வ.பரமசிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

 இதன்போது எமது இணையத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற 15 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போது இந்நிருவாக சபை தெரிவு செய்யப்பட்டது முதல் இற்றை வரை ( ஒன்றரை வருட காலத்தில்) எவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளனர் எனவும், கணக்கறிக்கை போன்றன கலந்துகொண்டோருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டதுடன் அவர்களது கருத்துக்களும் கேட்கப்பட்டது. 

தொடர்ந்து இணையத்தின் புதிய நிருவாக சபையானது 14.08.2014 ஆந் திகதி இன்று பங்குபற்றியவர்கள் முன்னிலையில் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில்.... 

1. தவிசாளர் : எம்.ஐ. ஹபீழ் 
2. உப தவிசாளர் : வீ. பரமசிங்கம் 
3. செயலாளர் : எம். துளசிமணி 
4. உப செயலாளர் : எஸ்.எம். பாத்திமா பாஹிறா
5. பொருளாளர் : வாணி சைமன் 
அங்கத்தவர்கள் : 
1. எஸ்.எல்.எம். நாசீர் 
2. ஏ.எல்.எம். பசீர் 
3. காந்திமதி ஜோய்
4. ஜே.எப். சந்திர சிறீ இவர்களிடம் இணையத்தின் செயற்பாடுகள் முன்மொழியப்பட்டு வழங்கப்பட்டது. இறுதியாக புதிய செயலாளர் திருமதி : எம்.துளசிமணி அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டு பகலுணவுடன் கூட்டம் நிறைவடைந்தது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :