த.நவோஜ்-
மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையின் வடாந்த விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை அமிர்தகழி பாடசாலை மைதானத்தில் அமிர்தகழி மெதடிஸ்த ஆலய குரு அருட்திரு பஞ்சரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், கோட்டமுனை மெதடிஸ்த ஆலய முகாமைக்குரு அருட்திரு ஞானரூபன், பாலமீன்மடு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி, உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜகத் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பாலர் பாடசாலை சிறுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை சின்னஞ் சிறார்களின் விளையாட்டு திறன்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன், வினோத உடை நிகழ்வு மற்றும் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கும் நிகழ்வுகள் போன்றன இடம்பெற்றது.
_Copy1+-+Copy.jpg)
_Copy1+-+Copy+-+Copy.jpg)
_Copy1+-+Copy.jpg)
_Copy1+-+Copy.jpg)
0 comments :
Post a Comment