முஹம்மட் ஜலீல்-
திட்டமிட்ட படி 03-08-2014 எமது அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் மீள் கட்டுமானம் சம்பந்தமான கலந்துரையாடல் எதிர்பார்த்ததையும் விட குறைவிலான பழைய மாணவர்களின் பிரசன்னத்துடன், பாடசாலை அதிபர், பிரதி அதிபர் மற்றும் தற்போதைய பழைய மாணவர் சங்க தலைவரின் தலைமையில் பாடசாலை கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.
திட்டமிட்ட படி 03-08-2014 எமது அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் மீள் கட்டுமானம் சம்பந்தமான கலந்துரையாடல் எதிர்பார்த்ததையும் விட குறைவிலான பழைய மாணவர்களின் பிரசன்னத்துடன், பாடசாலை அதிபர், பிரதி அதிபர் மற்றும் தற்போதைய பழைய மாணவர் சங்க தலைவரின் தலைமையில் பாடசாலை கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது முக்கியமான பல கருத்துக்கள் அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்க தலைவரினாலும் முன்வைக்கப்பட்டது. அதில் பின்வரும் விடயங்கள் முக்கியமாகவும், பாடசாலையின் வளர்ச்சியில் அதீததாக்கம் செலுத்துவதாகவும் காணப்பட்டது.
1. மாணவர்களின் அடிப்படை கல்வி குறைபாடு.
2. மாணவர்களின் போசாக்கு மற்றும் சுகாதார உளவியல் குறைபாடு
3. உயர்தர கணித விஞ்சான பகுதியின் வீழ்ச்சி
4. மாணவர் ஒழுக்கம்
5. சாதாரண தர பரீட்சை பெறுபேறு வீழ்ச்சி
உண்மையில் மேற்சொன்ன விடயம்களையும் தாண்டி இன்னும் பல விடயம்கள் இருந்தாலும், மேற்சொன்ன விடயங்கள் அனைத்தும் ஒரு அதி தீவிர உள்வாங்கலுக்குள் பழைய மாணவர்களினால் ஒரு நீண்ட விவாதத்துக்கு உட்பட்டது.
இதன் பின், சமூகமளித்த பழைய மாணவர்களின் சார்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு கீழ்வரும் விடயங்களில் ஒருமித்த உடன்பாட்டுக்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சில விடயங்கள் முன்மொழியப்பட்டன.
1. பழைய மாணவர் சங்கத்தின் நடைமுறைகளில் உள்ள அல்லது விடயங்களை அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் கருத்தில் கொண்டு, பழைய மாணவர் சங்கத்தின் மேற்பார்வையில் அல்லது அதன் ஒரு அங்கமாக " அல் அஷ்ரக் யூனியன்" என்ற ஒரு அமைப்பை உருவாக்குதல். இதில் சகல பழைய மாணவர்களும் அங்கத்தவர்களாக சேர்த்துக்கொள்ளல்.
2. தற்போதுள்ள பழைய மாணவர் சங்கத்தின் கடந்த ஈராண்டு நடவடிக்கை மற்றும் உறுப்பினர்கள் பட்டியல், கணக்கறிக்கை என்பன வெளிப்படை தன்மையுடன் சகலருக்கும் சமர்பிக்கப்படல்.
3. மேலே சொல்லப்பட்ட அதி தீவிர செயற்பாட்டுடன் முன்னெடுக்கபடவேண்டிய செயற்பாடுகளை வெற்றிகொள்ள தேவையான நடவடிக்கைகளை ஒரு திட்ட வடிவில் சமர்பித்தல்.
4. இதுவரை பழைய மாணவர் சங்கத்தில் உறுப்பினர் ஆகி கொள்ளாமல் இருப்பவர்களை சேர்த்து கொள்ளுதல்.
5. பழைய மாணவர் சங்கத்தின் வெளி நாட்டு கிளைகள்
6. மீண்டும் மேல் சொன்ன விடயங்களை உத்தியோகபூர்வமாக சகல பழைய மாணவர் சங்க பிரதிநிதகள் மற்றும் சகல பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் பங்களிப்புடன் எதிவரும் 10 ஆகஸ்ட் 2014 ஆம் திகதி ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை கூட்டுதல்.
இந்த பொதுக்கூட்டத்தை ஒழுங்கு செய்வும் , சகல பழைய மாணவர்களை ஒருங்கிணைக்கவும் கீழ்வரும் பழைய மாணவர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
1. Mr. Haleem - Lecturer - SEUSL
2. Dr. Fariz Ahamed - Oman
3. Eng. Athambawa Waakir Hussain- Saudi Arabia
4. Mr. Amjad Ahamed - Additional Land Registrar
5. Mr. Yoosuf Mohamed Irshad- President - UGA Nintavur
6. Mr. Mohamed Ismail Umar Ali- Nurse- Oman
7. Mr. MBM Hasan
8. Mr. I M Faiz
9. Mr. Jezeer Hameed- UN Habitat
10. Mr. Mohamed Saathir- Undergraduate
நமது இன்றைய முதலாவது செயலமர்வில் கலந்து கொண்டவர்களின் பெயர் விபரம்கள் கீழ்வருமாறு
1. A. Waakir Hussain
2. M.I. Umar Ali
3. Jezeer Hameed
4. A. Nasrin Atham
5. I.L.M. KIYAS
6. A.L.A.SIRAJ MOHAMED
7. M.M.M.SAAJITH
8. M.FARISH
9. A.M.HAIKAL
10.A.M.SHAFEER
11. Y.M.IRSHAD
12. M.A.M SHAFRAS
13. M.M.NUMAN
14. M.N.NUZAIR AHAMED
15. M.M.RUSAID
16. M.SAMSUN ALI
17. F.H.A.AMJAD
18. M.M.SAATHIR
19. M.S.FARIZ AHAMED
20. A.HALEEM
21. I. MOHAMED FAIZ
22. SIFAN RASIK
22. MR. LATHEEF- PRINCIPAL
23. MR. SATHAAR - REGISTRAR- SEUSL
24. MR. JABIR- VICE PRINCIPAL
.jpg)
0 comments :
Post a Comment