இந்திய பாராளுமன்றில் இலங்கை காரணமாக அமளி துமளி நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எதிராக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பில் பாராளுமன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் பாராளுமன்றில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோசங்களை எழுப்பி அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
அவைத் தலைவர் ஹமீட் அன்சாரியின் வார்த்தைக்கு கட்டுப்படாது கட்சியின் உறுப்பினர் அவைத் தலைவர் சூழ்ந்துகோண்டு கோசம் எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டம் காரணமா அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
15 நிமிடங்களுக்கு அவை நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக தலைவர் அன்சாரி அறிவித்திருந்தார். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

0 comments :
Post a Comment