அஸ்ரப் ஏ சமத்-
அக்கரைப்பற்று எம்.ஜ.எம் மொஹிடின் மிக பிரயோசனமான முறையில் அண்மைக்காலமாக முஸ்லீம்களுக்கு நடைபெற்ற சம்பவங்கள் சம்பந்தமான ஆங்கில மொழி மூலத்தில் இரண்டு நூல்களை வெளியீட்டுள்ளார். நேற்று கொழும்பு ரொஸமிட் பிலேசில் உள்ள அஸ்ரப் ஹூசைன் வீட்டில் வைத்து ஜனாப் மொஹிடின் இந்தப் புத்தகங்களை கையளித்தார்.
இந்தப் புத்தகங்கள் ஏற்கனவே சூரா கவுன்சிலின் வேண்டுகோளின்படியும் 250 புத்தகங்கள் கையளிக்கபபட்டுள்ளன. அத்துடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஹசன் அலியிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார். இப் புத்தகங்களை எனக்கு அச்சடிப்பதற்கு டொக்டர் றிஸ்வி சரிப் உதவியதாகச் சொன்னார். அத்துடன் இவ்வாறானதொரு புத்தகமமொன்றை எழுதுமாறு என்னை அஸ்ரப் ஹுசைன் ஊக்கப்படுத்தி உச்சாகப்படுத்தியதாக சொன்னார்.
கடந்தகாலத்தில் வட கிழக்கு பிரச்சினைகள், முஸ்லீம்கள் வடக்கில் வெளியேற்றிம் பற்றி பல நூல்களை அமைச்சர் அஸ்ரப் காலத்தில் இருந்து எழுதி இந்த உலகத்திற்கெல்லாம் அனுப்பியதாகவும் தெரிவித்தார் ஆனல் இந்த முஸ்லீம் சமுகத்திற்கு ஒன்றும் நடந்ததாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் வாழப்போகும் முஸ்லீம் சமுகம் எவ்வாறு தமது இருப்பை இந்த நாட்டில் பாதுகாத்துக்கொள்ளப்போகுன்றது ? என மொஹிடின் கவலைப்பட்டுக் கொண்டார்.
முதல் நூலில் அளுத்கம பேருவளையில் நடந்த சம்பவங்கள், 50க்கும் மேற்பட்ட அழிவுகள் மக்களின் அவல நிலை பற்றிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் தம்புல்ல பள்ளி, தொட்டு பொதுபல சேனாவின் ஹலால்பற்றிய கூட்டங்கள் தேரரினால் முஸ்லீம் களுக்கு எதிரான நடவடிக்கைகள் அமைச்சர் ஹக்கீம் ஜித்தாவில் ஒயில் நாடுகளின் செயலாளரைச் சந்தித்த படம் ஜனாதிபதிக்கு கலிபா பட்டம் வழங்கிய படம் மற்றும் 20 வருடத்தில் 3 முஸ்லீம் நாடுகள் 90 பில்லியன் இலங்கை அரசுக்கு அபிவிருத்திக்கு வழங்கிய தகவல்கள் என பல தகவல்கள் நூலில் உள்டக்கப்பட்டுள்ளது.
மற்றைய புத்தகம் 100 பக்கங்களைக் கொண்டுள்ளது. பொதுபலசேனா, சிகல உருமய முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்ட நிகழ்வுகள், ஏற்கனவே நவநீதம்பிள்ளையிடம் கையளித்த சம்பவங்கள் இந்;நுர்லில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் முஸ்லீம்களின் சனத்தொகை, பள்ளிவாசல்கள், மத்ரசாக்கள். நிலத் தொடர்புகள் அடங்கிய தகவல்களும் இந் நூலில் அடங்குகின்றன.
இராணுவத்தினைக்கொண்டு 2 மாத காலத்திற்குள் முஸ்லீம்களது சொத்துக்களை பெற்றோல்குண்டுபோட்டு அழிவுகளை புனர் நிர்மாணம் செய்து வெள்ளையடித்து அந்தத் தடயங்களை இல்லாமல் செய்தாலும் குறிப்பிட்ட இந்த புத்தகத்தில் உள்ள புகைப்படங்கள் சான்று செல்லும். ஆனால் காத்தாண்குடியில் இன்றும் விடுதலைப்புலிகள் தொழுகையில் ஈடுபட்டவரை சுட்ட தடயங்களை இன்றும் மக்களது காட்சிக்கு வைத்துள்ளார்கள்.
ஆனால் அளுத்கமவில் சகல தடயங்களும் அகற்றப்பட்டு அங்கு ஏதும் நடைபெறாவண்னம். இரானுவம் சகலதையும் புனர் நிர்மாணம் செய்துள்ளது.
ஆகக் குறைந்தது கொழும்பில் உள்ள அரபு தூதுவர்கள் கூட அங்கு சென்று பார்க்கவில்லை. குறிப்பிட்ட 3 முஸ்லீம் அமைச்சர்களையும் ஜனாதிபதியையும் தவிர.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)

0 comments :
Post a Comment