நிந்தவூர் பற்று காதி நீதிமன்ற நீதிபதியாக சாமஸ்ரீ தேசமான்ய அல்ஹாஜ் இமாம் மௌலவி (பலாஹி) அவர்கள் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த 01.08.2014ம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் முன்னாள் தலைவராகவும், நிந்தவூர் பற்று காதி நீதிபதியாகவும், நிந்தவூர் உலமா சபையின் தலைவராகவும் செயற்பட்டார்.
இதேவேளை கடந்த காலங்களில் நிந்தவூர் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் அக்கரைப்பற்றிக்குச் சென்று தமது தேவைகளை நிறைவேற்றி வந்தனர். ஆனால் தற்போது அந்த குறை நிபர்த்தி செய்யப்பட்டு நாளை சனிக்கிழமை (09.08.2014) முதல் இலக்கம் 119B 1ம் குறுக்குத்தெரு வீதி, நிந்தவூர்-16 எனும் முகவரியில் நிந்தவூர் பிரதேச காதி மன்றம் இயங்கவுள்ளது. எனவே பொது மக்கள் தங்கள் தேவைகளையும், பிணக்குகளையும் தீர்த்துக் கொள்ள மேற்காணும் முகவரியை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை நிந்தவூர் பிரதேசதிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட புதிய காதி நீதிபதியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (08.08.2014) நிந்தவூர் குறிஞ்சாப்பிட்டி தோட்டத்தில் நிந்தவூர் சமூக, பண்பாட்டு மறுமலர்ச்சி மன்றத்தினரால் மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் அல்ஹாஜ் எம். இசட். எம். முனீர், நிந்தவூர் பிரதேச காதி நீதிபதி அல்ஹாஜ் இமாம் மௌலவி மற்றும் மறுமலர்ச்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment